அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக்கடைக்கு சீல்

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (21:07 IST)
அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக்கடைக்கு சீல்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் இந்த கொரோனா வைரஸை வியாபாரமாக்க முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு மருந்து கடையில் அதிக விலைக்கு முக கவசம் விற்பனை செய்யப்பட்டதை அறிந்து அந்த கடையை மாவட்ட ஆட்சியர் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
கொரோனா வைரஸ் பாதிப்பை பயன்படுத்தி ஒரு சில மருந்து கடைகளில் முகக்கவசம் உள்பட ஒருசில பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக தமிழகமெங்கும் செய்திகள் வெளியாகி வந்தன. இது குறித்து தமிழக அரசு கடுமையான எச்சரிக்கையை மருந்து கடைகளுக்கு விதித்துள்ளது. ஆனால் இதனையும் மீறி புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் முக கவசம் அதிக விலைக்கு விற்பதாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் அந்த கடைக்கு மாவட்ட ஆட்சியரின் ஆள் ஒருவர் சென்று முகக்கவசத்தின் விலையை கேட்டார். அவர் மாவட்ட ஆட்சியரின் ஆள் என்பதை அறியாத கடைக்காரர் அதிக விலையை கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கடையை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments