Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (07:44 IST)
மழை பெய்தாலே தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வருமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கும், புதுவைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவ் ராவ் அறிவித்துள்ளார். நேற்றும் இம்மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அரபிக்கடலில் மகா மற்றும் க்யார் ஆகிய இரண்டு புயல்கள் உருவாகியதன் காரணமாக தென்மாநிலங்களில் குறிப்பாக குமரி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே தூத்துகுடி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.,
 
அதேபோல் நீலகிரி மாவட்டம்: குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments