Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்: அரசுக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்!

தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்: அரசுக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (16:56 IST)
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் தமிழக மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சியின் அனுகுமுறை மற்றும் எம்எல்ஏக்களை சுதந்திரமாக செயல்பட போதிய கால அவகாசம் வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
 
கடந்த ஒரு வார காலமாக அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்து அவர்களை தங்கள் தொகுதிக்கு செல்ல விடாமல். அராஜக போக்காக்க நேரடியாக கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து சட்டசபைக்கு கொண்டு வந்து வக்கெடுப்பு நடத்த முயன்றனர்.
 
ஆனால் இதற்கு ஓபிஎஸ் அணி மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களின் கருத்தை கேட்ட பின்னர் இன்னொருநாள் இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும், இல்லையென்றால் இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
ஆனால் இதனை சபாநாயகர் ஒரே அடியாக மறுத்து அனுமதிக்கவில்லை. இதனால் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மைக்குகள், நாற்காலிகள் உடைக்கப்பட்டன. ஆனால் அவர்களை வலுக்கட்டாயமாக சட்டை கிழிய அவர்களை அராஜகமாக அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றினார் சபாநாயகர்.
 
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர். இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மெரினாவில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
 
இந்நிலையில் இப்படிப்பட்ட சூழலில் நம்பிக்கை வக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொண்ட அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டாலின் தாக்கப்பட்டதை எதிர்த்து கடலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
 
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 100 க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக்கோட்டையில் அதிமுக அலுவலகம் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவபொம்மையை செருப்பால் அடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
தமிழ்நாட்டில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாகை, கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்து போக்குவரத்தை நிறுத்த சொல்லியும், காந்தி சாலையில் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தப்படுகிறது.
 
பல இடங்களில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இது போன்ற போராட்டங்கள் நடந்து வருவதால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது போல இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments