Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபத் திருவிழா: பக்தர்களுக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பு!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (08:55 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத் திருவிழாவிற்கு யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10 ஆம் தேதி (புதன்கிழமை) விடியற் காலை 06.30 மணிக்கு மேல் 07.25 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
 
இதனை தொடர்ந்து உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 10 ஆம் நாள் திருவிழா விடியற்காலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
 
மகா தீபத் திருவிழாவில் பக்தற்களுக்கு கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  இதே போல இம்முறையும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே அனுமதி வழங்கப்படவில்லை. 
 
கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்வுகள் அனைத்து தொலைக்காட்சிகள், உள்ளுர் கேபிள் டிவிக்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் திருக்கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments