Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகள்?

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:05 IST)
இன்று பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் தகவல்.

 
தமிழ்நாடு முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பிற்கும், நாளை 10 ஆம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், வினாத்தாள் அறைகளுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆம், தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 3,91,343 மாணவர்களும் 4,31,341 மாணவிகளும் எழுதுகின்றனர்.
 
இதனிடையே சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைரியமாக தேர்வு எழுதுமாறு மாணவர்களை வாழ்த்தியதாகவும் ஜூலைக்குள் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments