Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக்கல்லூரி மாணவி திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (06:22 IST)
கோவையில் பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி மாணவி 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

 
கோவையில் பிஎஸ்ஜி தனியார் மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த மாணவி லட்சுமி மருத்துவ படிப்பை முடித்து தற்போது பயிற்சி மருத்துவராக இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் செவ்வாயன்று மருத்துவ கல்லூரியின் 4ஆவது மாடியில் உள்ள அறுவை சிகிச்சை அறையில் இருந்திருக்கிறார். அதன் பிறகு, வராண்டாவிற்கு வந்த லட்சுமி திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், பலத்த காயத்துடன் லட்சுமியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தற்போது மருத்துவ கல்லூரி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
 
மாணவி லட்சுமியை அங்கிருக்கும் பேராசிரியர் ஒருவர் மிக மோசமாக திட்டியதால் மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments