Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடையடைப்பு முடிவை ஆரப்போட்ட வணிகர் சங்கம்!!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (11:04 IST)
தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்ததை வாபஸ் வாங்கியுள்ளது.  
 
கொரோனா பாதிப்பு கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக அதிகம் பரவியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு போல திருமழிசை இல்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்து வந்ததனர்.  
 
ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கோயம்பேடில் சந்தை மீண்டும் திறப்பட்ட வேண்டும் என கோரப்பட்டு வந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 10 கடை அடைப்பு ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த விக்கிரமராஜா கூறியதாவது, கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த காய்கறி, பழம், பூ கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என திடீரென அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments