Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அரசைக் கண்டித்து -மார்க்சிஸ்ட் கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

J.Durai
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (18:23 IST)
மத்திய அரசின் பட்ஜெட், 3 சட்டத் திருத்த மசோதா  உள்பட பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருவதாக குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கட்சியினர் நாடு முழுவதும்  மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சிபிஐ (எம் ), சிபிஐ, சிபிஐ ( எம்.எல் ) உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
முன்னதாக, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிலிருந்து கண்டன கோசங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர். 
 
தபால் நிலையம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீசார்,
கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments