Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மத்திய சிறையில் பரபரப்பு: கைதி அடித்துக் கொலை

மதுரை மத்திய சிறையில் கைதி அடித்துக் கொலை

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2016 (09:10 IST)
மதுரை மத்திய சிறையில் கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர்.


 

 
மதுரை மாவட்டம்  கீரைத்துறையைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் செந்தில்.
 
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 
கடந்த சில மாதங்களாக இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே, செந்தில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 
இந்நிலையில், மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள அரசன் பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தந்தை சவுந்திரபாண்டியை கொலை செய்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 
இவருக்கும் மனநிலை பாதிப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனால், இவரும் செந்தில் அடைக்கப்பட்டிருந்த அதே அறையில் அடைக்கப்பட்டார்.
 
செந்திலுக்கும் கடந்த சில நாட்களாக செந்தில் குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
 
இதைத் தொடர்ந்து, இவர்களுக்குள் நள்ளிரவில் தகராறு ஏற்படுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்போது, செந்தில்குமார் தாக்கியதில் செந்தில் படுகாயம் அடைந்து மயக்கமடைந்ததாக கூறப்படுகின்றது.
 
இது குறித்து தகவல் அறிந்த சூப்பிரண்டு ஊர்மிளா, கூடுதல் சூப்பிரண்டு தமிழ்செல்வம் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்திலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால், செந்தில் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments