Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டனை அழுத்தினால் 10 நிமிஷத்துல போலீஸ்! இனி தப்பிக்க முடியாது!? - சென்னையில் 24 மணி நேர Red Button Robotic COP!

Prasanth Karthick
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (08:54 IST)

சென்னையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை தடுக்க Red Button Robotic COP என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது சென்னை மாநகர காவல்துறை.

 

சென்னையில் பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் மாநகர காவல்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் தற்போது புதிதாக Red Button Robotic COP என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளனர்.

 

Red Button Robotic COP என்பது கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை அலாரத்துடன் கூடிய ஒரு பாதுகாப்பு சாதனம். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் பொருத்தப்படும் இடத்தை 360 டிகிரிக்கும் தனது கேமராவால் கண்காணிக்கும். இதில் உள்ள பாதுகாப்பு அலாரத்தை அழுத்தினால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களுடன் நேரடியாக பேச முடியும். மேலும் வீடியோ கேமரா மூலம் ஆபத்தில் உள்ளவர்களின் நிலைமை குறித்து அறிய முடியும்.

 

உடனடியாக ரோந்து பணிகளில் உள்ள காவலர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டு உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிடுவார்கள். இந்த சாதனத்தை மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் மட்டுமல்லாமல் பெண்கள் அதிகம் பயணிக்கும் ஆள்நடமாட்டமற்ற பகுதிகளிலும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments