Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுக்கிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற குடியரசுத்தலைவர் ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம்!

பொறுக்கிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற குடியரசுத்தலைவர் ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம்!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (16:11 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாநிலம் தழுவிய போராட்டத்தை மேற்கொண்டனர் தமிழக இளைஞர்கள், மாணவர்கள். இவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து கூறி வந்தார். இதனால் தமிழகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.


 
 
ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சிப்பதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார். இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனையடுத்து ஆங்காங்கே கலவரங்கள் நடந்தன. சில மணி நேரம் சென்னை ஸ்தம்பித்து போனது.
 
இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 
அவர் தனது பதிவில், குடியரசுத்தலைவர் ஆட்சியை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவ போன்றவற்றை கொண்டுவர வேண்டும். நக்சல்கள், ஜிகாதிகள் மற்றும் பொறுக்கிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க இதுவே சரியான நேரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments