Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் உடனே விடுதலை செய்ய வைகோ கோரிக்கை

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (22:38 IST)
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. 


 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
'சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்திடம் நியாயமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
 
சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 95 ஆண்டு காலமாக ஜனநாயக முறைப்படி மாணவர் பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலின் போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு தேர்தலை நடத்துவது இல்லை என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
இதனால், மெரினா கடற்கரை சாலையில் கண்ணகி சிலை அருகே மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் சாலை மறியல் செய்துள்ளனர்.
 
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தாமல், திடீரென்று தடியடி நடத்தி அவர்களை ஓடஓடவிரட்டியுள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில், மதுக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் மீதும் இதே போல காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. தற்போதும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
 
ஜெயலலிதா அரசு தமிழக மாணவர்களை அச்சுறுத்தவே இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அரசின் இந்த அணுகுமுறைக்கு கண்டனத்திற்குரியது.
 
எனவே, கைது செய்யப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

Show comments