Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடத்தில் விஜயகாந்திற்கு சிலை மற்றும் மணிமண்டபம் வைக்க அரசிற்கு கோரிக்கை- பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (13:55 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார்.
 

அவரது மறைவு சினிமாவுக்கும், அரசியலுக்கும் பேரிழப்பு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

நேற்று  விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த், ‘’தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு அரசு மரியாதைக்கு நல்ல முறையில் ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  பொது இடத்தில் விஜயகாந்திற்கு சிலை மற்றும் மணிமண்டபம் வைக்க அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
மேலும், விஜயகாந்த்  நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம், எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments