Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக, திமுக தலைமீது கத்தி தொங்கி கொண்டிருக்கின்றது: பிரேமலதா

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (09:36 IST)
அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
 
திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு கூட்டணியும் தேமுதிகவை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
 
அதிமுக கூட்டணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தேமுதிக இருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியும் அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே தேமுதிக தனித்து விடப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் செங்கல்பட்டில் பிரேமலதா இன்று பேசியபோது தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுகவுக்கு எதிர்காலம் என்றும் அதிமுக திமுக இரு கட்சிகளுக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் தேமுதிகவிற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
 
ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணியில் தேமுதிக இணையவில்லை என்றால் தேமுதிகவின் முடிவு வெகு சீக்கிரம் எழுதப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments