வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்; பிறந்த குழந்தை பலி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (09:45 IST)
கோவையில் பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முயன்று குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் செட்டி வீதியை சேர்ந்தவர் புண்ணியவதி. இவருக்கு திருமணமாகி சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் கர்ப்பமாகியுள்ளார். நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற முயன்றுள்ளார்.

அதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள் கொடியை சரியாக அறுக்காத காரணத்தால் பிறந்த சில நிமிடங்களில் குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து புண்ணியவதி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சி செய்து குழந்தை உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments