Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'அம்மா'வுக்காக, சிவன், பார்வதி, முருகன், விநாயகர், காளி உள்ளிட்ட கடவுள் வேடங்களில் கூட்டுப் பிரார்த்தனை

'அம்மா'வுக்காக, சிவன், பார்வதி, முருகன், விநாயகர், காளி உள்ளிட்ட கடவுள் வேடங்களில் கூட்டுப் பிரார்த்தனை
, திங்கள், 6 அக்டோபர் 2014 (12:15 IST)
ஜெயலலிதா எல்லா வழக்குகளில் இருந்தும் மீண்டு வரவேண்டும் என்று வித்தியாசமான முறையில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர், காளி உட்பட கடவுள் வேடங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது.



 
தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கலைமாமணி பி.சோமசுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
 
புரட்சி தலைவி அம்மா அவர்கள் எல்லா வழக்குகளில் இருந்தும் மீண்டு வர வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய உள்ளோம்.
 
சிவன், பார்வதி, முருகன், விநாயகர், காளி உட்பட பல வேடங்களில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
 
அத்துடன் கிராமிய கலைஞர்களான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்  சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அந்த உடையலங்காரத்துடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
 
இந்தப் பிரார்த்தனையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் தேனிசைத் தென்றல் தேவா தலைமையில் செயலாளர் சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
 
இந்தக் கூட்டுப் பிரார்த்தனை  07.10.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல்  1 மணி வரை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர்  நினைவிடத்தில்  நடைபெற உள்ளது. இதில் கலைமாமணி விருது பெற்ற பல கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil