Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணவ படுகொலை செய்யப்பட்ட பிரவீன் மனைவி தற்கொலை.. கடிதம் சிக்கியதால் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (12:38 IST)
ஆணவ படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் அவர் தன் மரணத்திற்கு தன்னுடைய பெற்றோர், அண்ணன்களே காரணம் என ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
 
மேலும் தன் கணவன் இல்லாத இந்த உலகத்தில் இனி இருக்கப்போதில்லை என உருக்கமாக எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பெற்றோர், சகோதரர்கள் பெயரை குறிப்பிட்டு ஷர்மிளா எழுதிய கடிதம் வெளியானதை அடுத்து காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிகிறது.
 
சென்னை பள்ளிக்கரணையில் சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா தற்போது தற்கொலை செய்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரவீன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஷர்மிளாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்றும்,  சாதிய ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை  தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments