Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் கிஷோர் ஐடியாவுக்கு துரைமுருகன் எதிர்ப்பா? திமுகவில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (20:59 IST)
வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆலோசனை கூற பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அதிமுகவை மட்டுமின்றி ரஜினியையும் சமாளிக்க அவர் பல அதிரடி ஆலோசனைகளை கூறி வருவதாகவும் இதனால் திமுக பிரமுகர்கள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது
 
குறிப்பாக பிரசாந்த் கிஷோர் கூறிய ஆலோசனைகளில் மிகவும் முக்கியமானது தனித்து போட்டி என்பது தான் என்றும், திமுக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கூட்டணி கட்சிக்கு கொடுக்கும் தொகுதிகள் அனைத்தும் வேஸ்ட் என்றும் அவர் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது 
 
அப்படியே கூட்டணி கட்சிகளை சேர்த்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினாராம். இந்த ஆலோசனையை திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல முன்னணி தலைவர்கள் ஏற்றுக்கொண்டாலும் துரைமுருகன் கடுமையாக எதிர்ப்பதாக கூறப்படுகிறது
 
கூட்டணி கட்சியின் தயவு இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டால் மீண்டும் நாம் எதிர்க்கட்சியாக தான் உட்கார வேண்டி இருக்கும் என்று முக ஸ்டாலினை துரைமுருகன் அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து என்ன முடிவு எடுப்பது என்று முகஸ்டாலின் குழப்பத்தில் இருப்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments