பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து விலகும் பவர்ஸ்டார் சீனிவாசன்?

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (13:07 IST)
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் விலக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. 
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, தாடி பாலாஜியின் மனைவி நித்யா, நடிகை ஜனனி ஐயர்,நடிகை யாஷிகா ஆனந்த், நடிகை மும்தாஜ், நடிகர் பொன்னம்பலம், நடிகர் செண்ட்ராயன், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து பவர்ஸ்டார் சீனிவாசன் விலக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதற்கான காரணம் சம்பள விவகாரம் எனக்கூறப்படுகிறது. பிரபலங்களை பொறுத்து அவர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தங்களும் போடப்படுகிறது.
 
ஆனால், பேசப்பட்ட தொகை முழுதாக கொடுக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சி தரப்பில்  சரியான பதில் கிடைக்காததால், கடைசி பவர்ஸ்டார் சீனிவாசன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த தகவலை இன்னும் அவர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments