Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (18:09 IST)
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்ய நேர்காணல் கடந்த சில மணி நேரங்களாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்து வந்த நிலையில் சற்றுமுன் திமுகவின் அதிகாரபூர்வ திருவாரூர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

திமுக தொண்டர்கள் பலர் ஏற்கனவே எதிர்பார்த்தபடி திருவாரூர் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொகுதியில் செல்வாக்கு பெற்றவரும், கருணாநிதி போட்டியிட்டபோது அவரது வெற்றிக்கு பெரிதும் பணியாற்றியவருமான பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்காக அவரது ரசிகர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும் உதயநிதி நேர்காணல் செய்யப்படவில்லை என தெரிய வருகிறது. திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் இன்னும் ஓருரி நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments