Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்முடி வழக்கு இன்று விசாரணை.. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு..!

Siva
வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:12 IST)
திமுக அமைச்சராக இருந்த பொன்முடி  அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்ய இருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி செய்த  மேல்முறையீடு மனு இன்று விசாரணை செய்யப்படவுள்ளது.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
 
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமின் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது 
 
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்ட நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று தீர்ப்பு வழங்குகிறார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

எடப்பாடி தரப்பில் இருந்து பரப்பப்பட்ட வதந்தி? விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments