Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மாற்றப்படுகிறதா தமிழ் புத்தாண்டு? – பொங்கல் பையால் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (13:01 IST)
தமிழக அரசால் பொங்கலுக்கு வழங்கப்படும் பைகளில் தமிழ் புத்தாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முன்னதாக கருணாநிதி ஆட்சியின்போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என அதற்கு எதிர்ப்புகளும் இருந்தன.

இந்நிலையில் தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைத்த நிலையில் தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரியில் பொங்கல் கொண்டாடுவதற்கான பொங்கல் பை தொகுப்பை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பு பையில் பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்ற திமுக முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments