Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்: பொன்னார் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (09:36 IST)
சமீபத்தில் வைகோ கன்னியாகுமரி மாவட்டத்தில் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பாஜகவினர் அவருக்கு கருப்புக்கொடி காட்டினர். மேலும் வைகோ வேன் மீது கல்வீச்சும் நடைபெற்றது. அப்போது வைகோ மிக ஆவேசமாக தன்மீது கல்வீசியவர்கள் பாஜகவின் கைக்கூலிகள் என்று பேசினார்.
 
வைகோவின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்மீது கல்வீசியது பாஜக கைக்கூலிகள் என வைகோ கூறியது அநாகரீமான வார்த்தைகள் என்றும் கூறினார்.
 
மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கிண்டல் செய்பவர்கள் துரோகிகள் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், 'கோடிக்கணக்கில் செலவு செய்து திறக்கப்படும் ஆலைகளை உடனே மூடவேண்டும் என்றால் அது சாத்தியமில்லை' என்று ஸ்டெர்லைட் ஆலை குறித்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments