Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணி எந்த கட்சியோடும் இருக்கலாம்! – சூசகமாக பேசிய பொன்னார்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக கூட்டணி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒருபக்கம் கட்சி பிரமுகர்கள் கட்சி விட்டு கட்சி தாவி வரும் நிலையில், மற்றொரு புறம் கூட்டணி தொடர்பான விவாதங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் பாஜக கூட்டணி அமைக்கும் கட்சியே ஆட்சியமைக்கும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

பாஜக பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளை சொல்லி வந்தாலும் பாஜக தலைவர் எல்.முருகன் இதுபற்றி எதுவும் சொல்லவில்லையே என கேஷுவலாக கடந்து செல்கிறார்கள் அதிமுக பிரபலங்கள். இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பேசியிருந்த பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் நடைபெறும். ஆனால் அது எந்த கட்சியுடனும் இருக்கலாம்” என கூறியுள்ளார்.

இதனால் பாஜக கூட்டணிக்காக வேறு சில கட்சிகளுடனும் பேசி வருகிறதோ என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments