Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘காமஹாசனும் கதாகாலட்சேபமும்...!’ வெறிபிடித்து அலைகிறார்! கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த நமது அம்மா!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (18:32 IST)
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். 

அதில், அதிமுக அரசை கடுமையாக சாடிய அவர் . பொள்ளாச்சி சம்பவ ஆடியோவைக் கேட்டது முதல் மனசு பதறுது. அந்தப் பொண்ணோட குரலில் இருந்த அதிர்ச்சி, பயம் , தவிப்பு திரும்பத் திரும்ப காதுல கேட்குது. நிர்பயாவுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றாக திரண்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்" என்றார். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசு எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறது. என கேள்வி எழுப்பியிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை, அதிமுக நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.
 
இதுகுறித்து புரட்சித்தலைவி நமது அம்மா நாளிதழில் "காமஹாசனும் கதாகாலட்சேபமும்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், கமல்ஹாசன் போன்றோர் அதிமுக மீது வன்மம் கொண்டு உள்நோக்கம் கற்பிக்க வெறிபிடித்து அலைவதாக குறிப்பிட்டுள்ளது.
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், திமுக போன்ற சில கட்சிகளுடன் கமல்ஹாசனும் சேர்ந்துகொண்டு செயல்படுவதாக விமர்சித்துள்ளது. 


 
மேலும் ஜெயலலிதாவின்  மரணச் செய்தியை அடிமனதில் கொண்டாடியவர் கமல்ஹாசன் என விமர்சித்த அதிமுக நாளேடு, பொள்ளாச்சி விவகாரத்தில் கமல்ஹாசன் உள்நோக்கம் கற்பிப்பதில் புதுமை ஒன்றும் இல்லை எனவும் சாடியுள்ளது. 
 
முதலில் நடிகை கவுதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்து சென்றதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்து விட்டு, பாலியல் குற்றங்கள் குறித்து கமல்ஹாசன் கதாகாலட்சேபம் நடத்தலாம் எனவும் அதிமுக நாளேடு விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்