Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரு உள்விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:57 IST)
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில் சென்னையில் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடந்தது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே நடத்தப்பட உள்ளது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்புக்காக காவலர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறாக காவல் பணியில் இருந்த காவலர் செந்தில்குமார் என்பவர் திடீரென தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமார் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தவர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments