ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்..!

Siva
திங்கள், 22 ஜூலை 2024 (15:19 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை தனிப்படை போலீஸ் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலை 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேடி வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ரவுடி சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து  தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் சென்றுள்ளதாகவும், அவர்கள் சம்போ செந்திலை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் போலீசார் சுறுசுறுப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர் என்பது தெரிந்தது 
 
குறிப்பாக தமிழக முதல்வரே நேரடியாக ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் சென்று இந்த கொலைக்கு காரணமான ஒருவரையும் விடமாட்டோம் என்று உறுதியளித்ததை அடுத்து தீவிரமாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments