Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் பலி: பொதுமக்கள் போராட்டம்

காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் பலி: பொதுமக்கள் போராட்டம்
, திங்கள், 6 ஜூன் 2016 (08:09 IST)
சென்னை அயனாவரத்தில காவல்துறை வாகனம் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் மரணமடைந்தனர், இதனால் பொதும்க்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.


 

 

 
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ராம்குமார் சாலமன் ஆகிய இருவரும் 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அயனாவரம் ரயில்வே நிலையம் அருகே நடந்த கால்பந்து போட்டியை காண மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். ரயில்வே மைதானம் அருகில் சென்றபோது அவ்வழியே வந்த காவல்துறை வேன் இவர்கள் வாகனம் மீது மோதியதில் இருவரும் சம்பவே இடத்திலே உயிரிழந்தார்.
 
விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர்.
காவல்துறையினர் வாகனத்தை விட்டு ஓட்டம்பிடித்தனர். இதனால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து காவல்துறை வாகனத்தை கற்களால் அடித்து உடைத்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி காவல்துறையினரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 
 
இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த சாலை மறியலை அகற்ற காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு செல்லாததால் மாகநகரத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
இந்த போராட்டதை தகர்க்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அயனாவரம் பகுதியில் காவல்துறையினர் பாதுக்காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா சீனாவுக்கு எச்சரிக்கை; பிரச்சினைகளை கண்டு பயமில்லை என சீனா நிராகரிப்பு