Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன் விசிக போராட்டம்: போலீசார் தடியடி

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (11:32 IST)
குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன் விசிக போராட்டம்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவதூறு பேச்சை கண்டித்து சிதம்பரத்தில் போராட்டம் செய்யப் போவதாக நடிகை குஷ்பு அறிவித்ததோடு இன்று காலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் கிளம்பினார். அப்போது அவர் முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பு தற்போது கேளம்பாக்கம் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பூ தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
மேலும் விடுதியின் தடுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினரும் விடுதி அருகே கூடினர்
 
பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தையினர் இடையே தள்ளுமுள்ளு போராட்டம் நடைபெற்றதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments