Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணிமாற்றம்.. அதிரடி நடவடிக்கை..!

Siva
ஞாயிறு, 18 மே 2025 (15:08 IST)
திருப்பூரில் "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றி விழா நடந்த போது, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை இரண்டு போலீஸ்காரர்கள் சந்தித்த நிலையில், அவர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி மற்றும்  ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து, திருப்பூரில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சின்னச்சாமி மற்றும் மந்திரம் ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து இருவரையும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அழைத்து, பணியிட மாற்றம் செய்து திருப்பூர் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அதேபோல், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த நல்லசாமி என்பவர், பெண் ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாஜக தலைவர் சந்தித்ததற்காக இரண்டு போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

நடாஷாவை நாயை போல தூக்கி எறிய வேண்டும்! பெண் ரிப்போர்ட்டரை சாடிய ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம்! டிகிரி போதும்..! SBI வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

அடுத்த கட்டுரையில்
Show comments