Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உமா மகேஸ்வரி கொலைக்கு பக்கா ஸ்கெட்சிங்... துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்!

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (10:00 IST)
முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டதில் துப்பு ஏதும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர். 
 
முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதனால் நெல்லை பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. 
 
இந்த நிலையில் உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லை போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு துப்பு துலக்கி வருகின்றனர். 
மேலும் மோப்ப நாய் உதவியுடனும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 70 பேரிடம் விசாரணையை துவங்கிய போலீஸார் அப்படியே அது மெது மெதுவாக குறைந்து 7 பேர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். 
 
அதோடு, அந்த பகுதியில் சுற்றி திரிந்த 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், கொலையாளிகள் உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என யூகித்துள்ளனர் போலீஸார். 
ஏனெனில் வந்தவர்கள் வீட்டின் ஹாலில் உட்கார்ந்து தண்ணீர் குடித்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதாம். இருப்பினும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரிய ஆதாரம் ஏதும் கிடைக்காததல வழக்கை அடுத்தக்கட்ட விசாரணைக்கு எப்படி எடுத்து செல்வது என புரியாமல் திணறி வருகின்றனராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

பெண் அமைச்சரை கொச்சையாக பேசிய வழக்கு: கைதான ஒரே நாளில் சிடி ரவிக்கு ஜாமீன்..!

சென்னையில் இருந்து 390 கிமீ-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பா?

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments