Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசுக்கு கணக்கு வெச்சுருக்கியா? முட்டை வியாபாரியிடம் பணம் அபேஸ் – சென்னையில் நூதன கொள்ளை!

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (12:38 IST)
சென்னையில் போலீஸ் போல வேடமிட்டு முட்டை வியாபாரியிடம் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் முகமது வாசிம். அந்த பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வரும் அவர் நேற்று முன் தினம் பணம் எடுத்துக் கொண்டு சிருங்கேரி மடம் சாலையில் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற போலீஸார் இருவர் அவரை நிறுத்தி எங்கு போய் வருகிறீர்கள்? பணம் எவ்வளவு வைத்துள்ளீர்கள்? என விசாரித்துள்ளனர்.

அவரிடம் 2.25 லட்ச ரூபாய் இருப்பதாக கூறவும் அதை அவரிடமிருந்து பறிமுதல் செய்த அவர்கள் இந்த பணத்திற்கான முறையான ரசீது உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். வாசிம் ரசீது இல்லை என்று கூற உரிய ரசீதை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு வந்த இன்னோவா கார் ஒன்றில் ஏறி சென்றுள்ளனர்.

இதுகுறித்து வாசிம் தனது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அவர்கள் நேராக காவல் நிலையம் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் காவலர்கள் எந்த பணத்தையும் பறிமுதல் செய்யவில்லை என்றும், போலீஸ் வேடமிட்ட கும்பல் இந்த நூதன கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

சென்னையில் பட்டா பெற சிறப்பு முகாம்.. முக்கிய அறிவிப்பு..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டது: முதல்வர் பட்நாவிஸ் குற்றச்சாட்டு..!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments