Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரை கொலை செய்தது காவல்துறை: தமிழச்சி அதிரடி!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (05:56 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


 


இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறி வந்த தமிழச்சி ராம்குமார் தற்கொலை செய்தி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது.

”சிறையில் ராம்குமாரை காவல்துறை கொலை செய்துள்ளது.

சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையினர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே அறிந்து அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.

ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போ மகளிர் உரிமைத்தொகை? - உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் கோரிக்கை.. பதிலடி கொடுத்த ஜஸ்டின்..!

நேற்றைய உயர்வுக்கு பின் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

4 நாட்கள் மாற்றமில்லாமல் இருந்த தங்கம் இன்று உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுதாகர் நீக்கம்.. அதிமுக அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments