Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலிகடா ஆக்கப்பட்டாரா ராம்குமார்? : பகீர் தகவல்கள்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (14:35 IST)
சுவாதி வழக்கில், யாரோ செய்த கொலைக்கு ராம்குமாரை போலீசார் பலிகடா ஆக்கியுள்ளனர் என்று அவரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


 

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுவாதியை தான்தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என்றும், உண்மையான குற்றவாளியை மறைக்க போலீசார் முயல்கிறார் என்றும் வழக்கறிஞர் கிருஷணமூர்த்தி என்பவர் பரபரப்பு புகார்களை கூறினார். மேலும், ராம்குமாரின் ஜாமின் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.
 
ராம்குமார கைது தொடர்பாக, கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:
 
நெல்லை மருத்துவமனையில், மாஜிஸ்திரேட் முன்னிலையில், ராம்குமார் வாக்குமூலம் கொடுத்த போது, போலீசார் சில தாள்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அதை சரியாக படித்து பார்ப்பதற்கு கூட ராம்குமாரை போலீசார் அனுமதிக்கவில்லை. 
 
மூன்று மாதங்களுக்கு முன் வேலை தேடி வந்த ராம்குமாருக்கு, பேஸ்புக் மூலம் சுவாதியின் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூன்றே மாதத்தில் காதல் ஏற்பட்டு கொலை வரைக்கும் அவர் செல்வாரா?
 
இரண்டு முறை ரயில் நிலையத்தில் சுவாதியை தான் அடித்ததாகவும், தன்னுடைய தோற்றம் பற்றி இழிவாக பேசியதால் வாயில் வெட்ட வேண்டும் என்று நண்பர்கள் சொன்னதாகவும் ராம்குமார் கூறியுள்ளார். அந்த நண்பர்கள் யார்?
 
சுவாதியை கொலை செய்ய முடிவெடுத்த சிலர், ராம்குமாரை கருவியாக பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், ராம்குமார் மிகவும் சாதுவான வாலிபராகத்தான் இருந்துள்ளர். அவரை யாரோ இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் காப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ராம்குமாருக்கு பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் பற்றி எந்த விசாரணையும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. 

அவரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது அவர் கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் பேசவே கூடாது என்று  முடிவெடுத்து போலீசாரே அதை செய்திருக்கலாம். அந்த நள்ளிரவில் அந்த காட்சியை படம் எடுத்தவர் யார்?
 
முழு விசாரணை முடியும் முன்பே, பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கமிஷனர் ராஜேந்திரன் “ராம்குமார்தான் குற்றவாளி என்று எப்படி தெரிவித்தார்?” அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதா?
 
சுவாதியின் பெற்றோர்கள் எதை மறைப்பதர்காக வாய் மூடி மௌனமாய் இருக்கிறார்கள்? அவர்களை யார் தடுக்கிறார்கள்?
 
முக்கியமாக, கொலையாளி என போலீசார் வெளியிட்ட வீடியோவில் இருக்கும் நபரும், ராம்குமாரும் ஒன்றுதான் என்று தடவியல்துறை ஆய்வு செய்து இன்னும் அறிக்கை கொடுக்கவில்லை. அதற்குள் ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவுக்கு போலீசார் எப்படி வந்தார்கள்?
 
சுவாதி ஏற்கனவே மைசூரில் பணிபுரிந்துள்ளார். அவரின் கொலைக்கும் மைசூருக்கும் எதாவது தொடர்பு உள்ளதா? மூன்று மாதங்களாக ஒருவர் பின் தொடர்ந்தார் என்றால், சுவாதி  இதுபற்றி பெற்றோர்களிடம் தெரிவிக்காமலா இருந்தார்? காவல் துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை? சுவாதியை கொலை செய்ய முடிவெடுத்த யாரோ, அவர்களின் திட்டத்திற்கு ராம்குமாரை பயன்படுத்தியுள்ளனர் என்ற சந்தேகம் எழுகிறது. 
 
இது எல்லாவற்றுக்கும் போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற கொலை மீண்டும் ஒருமுறை நடக்கக்கூடாது என்ற எண்னத்தில், அரசுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளேஎன். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments