ரவுடிகள் கைது சரி ; ஸ்பாட்டில் இருந்த வழக்கறிஞர்களை தப்ப விட்டது ஏன்?

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (16:16 IST)
சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள மலையம்பாக்கத்தில்  நேற்று இரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்த சில வழக்கறிஞர்கள் தப்பி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
சென்னை பூவிருந்தவல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 70க்கும்  மேற்பட்ட ரவுடிகளை நேற்று இரவு சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரவுடிகளிடமிருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
 
ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த போது, 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பிறந்த நாள் நாயகனான, போலீசாரால் தேடப்பட்ட ரவுடி பினு என்னவானார் என இதுவரை தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது தப்பிவிட்டாரா எனவும் போலீசார் எந்த தகவலும் கூறவில்லை. 
 
அந்நிலையில், ரவுடி பினுவுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட ரகசிய உடன்பாடு காரணமாக, அனைத்து ரவுடிகளும் அங்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் செய்தியும் ஒரு பக்கம் பரவி வருகிறது. அதேபோல், கைது செய்யப்பட்டவர்களில் சில வழக்கறிஞர்களும் இருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.  அவர்கள் வழக்கறிஞர்கள் என தெரிந்த பின் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட டீலிங் காரணமாக அவர்களை போலீசார் விட்டு விட்டனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அவர்கள் ரவுடி பினு உள்ளிட்ட சில ரவுடிகளின் வழக்குகளை கவனித்து வந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments