Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பண பரிவர்த்தனை செய்தாரா மகா விஷ்ணு? போலீசார் விடிய விடிய விசாரணை

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (09:29 IST)
போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம் வெளிநாட்டு பண பரிவர்த்தனை குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் மாணவிகள் மத்தியில் பேசிய மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மகாவிஷ்ணுவை நீதிமன்ற காவலில் எடுத்துள்ள காவல்துறையினர் அவரிடம் வெளிநாட்டு பண பரிவர்த்தனை குறித்து விடிய விடிய விசாரணை செய்ததாகவும் இதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகா விஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்துள்ள சைதாப்பேட்டை போலீசார் விடிய விடிய விசாரணை செய்ததில் சொற்பொழிவு மூலம் சம்பாதிக்கும் பணம் குறித்தும், வெளிநாட்டு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மகா விஷ்ணுவை திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ள போலீசார் அங்கும் விசாரணை செய்தனர். மேலும் மகா விஷ்ணு யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள அனைத்து வீடியோக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments