Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 கோடி பழைய நோட்டு மாற்றிக் கொடுத்ததில் மோசடி செய்த இன்ஸ்பெக்டர்...

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:47 IST)
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதில் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பழைய நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதில் இதுவரை இடைத்தரகர்கள் மற்றும் வங்கி ஊழியர்களே சிக்கினர். ஆனால், தற்போது ஒரு போலீஸ் அதிகாரியும் அதில் சிக்கியுள்ளார்.
 
சென்னை அண்ணாநகர் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜெயச்சந்திரன். இவர், தன்னுடைய உறவினர் மூலமாக, ஒருவருக்கு பழைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்து வந்துள்ளர்.
 
எனவே, இவரை தொடர்பு கொண்ட ஒரு தொழிலதிபர் ரூ.1 கோடியை அவரிடம் கொடுத்துள்ளார். அதில், ரூ.64 லட்சத்தை மட்டும் புதிய நோட்டாக சந்திரன் மாற்றிக் கொடுத்து விட்டார். மீதி ரூ.36 லட்சத்தை அவருக்கு திருப்பி தராமல் கடந்த 3 மாதங்களாக இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த தொழில் அதிபர், சென்னை கமிஷனர் அலுலகத்திற்கு சென்று, உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டார்.
 
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்பெக்டர் சந்திரன் பலருக்கு இதுபோல் பணத்தை மாற்றிக் கொடுத்து, கமிஷன் பெற்றிருப்பது தெரிய வந்தது. எனவே, அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
 
ரூபாய் நோட்டு விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவரே சிக்கியுள்ளது, சென்னை போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments