Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்சரிக்கையை மீறி ப்ராங்க் வீடியோ! – பிரபல யூட்யூப் சேனல் மீது வழக்குப்பதிவு!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:49 IST)
கோவையில் ப்ராங்க் வீடியோ என மக்களை இம்சிக்கும் யூட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதை மீறி வீடியோ வெளியிட்ட சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இளைஞர்கள் ப்ராங்க் வீடியோ செய்வது பிரச்சினைக்குரிய காரியமாக மாறியுள்ளது. முக்கியமாக கோயம்புத்தூர் பகுதியில் புற்றீசல் போல கிளம்பியுள்ள பல யூட்யூப் சேனல்கள் ப்ராங்க் என்ற பெயரில் மக்களை தொல்லைப்படுத்தி வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளது.

இதனால் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கோவை மாநக காவல்துறை, கோவை மாநகரில் பொதுமக்களை இடையூறு செய்யும் விதமாக ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, சேனலும் முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி கோவை 360 என்ற சேனல் ப்ராங்க் வீடியோவை அப்லோட் செய்ததால் அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து ப்ராங்க் வீடியோ எடுக்கும் சேனல்கள் மீது நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments