Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.8.84 கோடி அபராதம் வசூல்!

Webdunia
சனி, 30 மே 2020 (10:37 IST)
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,53,543 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என தகவல். 

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.   
  
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.     
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,53,543 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 4,33,101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 5,18,391 வழக்குகள் பதிவு, ரூ.8.84 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

வங்க கடலில் உருவாகும் தற்காலிக புயல்? கரை கடக்கும் முன்னர் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

உயிரிழந்த தொண்டர்கள் குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி! வெளியே சொல்லாமல் நடத்த திட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments