கொரோனா அதிகரிப்பதை போல அதிகரிக்கும் ஊரடங்கு வசூல்!!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (10:57 IST)
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,45,233 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.      
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 6,45,233 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 4,74,087 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 5,92,614 வழக்குகள் பதிவு, ரூ.12.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments