Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணைக்கு சென்ற இளைஞரின் கையைக் கடித்த காவலர்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (15:55 IST)
ராமநாதபுரத்தில் விசாரணைக்காக இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் அழைத்து சென்று அவரை கடுமையாக தாக்கி கையைக் கடித்ததாக புகார் அளிக்கப்பட்‌டுள்ளது.


 
 
ராமநாதபுரம் மாவட்டம், கொட்டிகுளத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் கார்த்திக் என்பவர். இவர் வழக்கு ஒன்றில் கையெழுத்துப்போட ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
 
அப்போது, இளைஞர் கார்த்திக்கை, சுரேஷ் என்ற காவலர் விசாரணைக்காக அழைத்து சென்று, விசாரணையின் போது அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கார்த்திக்கின் கையும் அந்த காவலர் கடித்ததாக கூறப்படுகிறது.
 
இளைஞரை கடித்த காவலர் சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது ‌உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளார். காவலரால் தாக்கப்பட்ட கார்த்திக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள்.. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments