பேரறிவாளவன் விவகாரம்: வேலூரில் இருந்து சென்னைக்கு பேரணி மாற்றம்
வேலூரில் பேரணிக்கு போலீஸ் தடை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்யக் கோரி வேலூரில் நடைபெற இருந்த பேரணி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்யக் கோரி வேலூரில் 7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில் பேரணி நடைபெற இருந்தது.ஆனால், இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதிதரவில்லை.
இதனால், இந்தப் பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி, கோட்டையில் முடிவடைகிறது. பின்பு, முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கப்பட உள்ளதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.