Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த காலத்திலும் பெண்சிசுக்கொலையா ? – செவிலியரால் கைது செய்யப்பட்ட கும்பல் !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (08:58 IST)
கிருஷ்ணகிரி அருகே இரண்டாவது குழந்தையும் பெண்குழந்தையாக பிறந்ததால் குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யோசிராஜா மற்றும் சத்யா தம்பதிகள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது மனைவி சத்யா கர்ப்பமானதை அடுத்து குடும்பத்தினர் ஆண்குழந்தையை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இம்முறையும் அவர்களுக்கு பெண் குழந்தையே பிறந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால் சத்யாவுக்கும் அவரது குழந்தைக்கும் தடுப்பூசி போடுவதற்காக மங்கை எனும் அரசு செவிலியர் யோசிராஜா வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் குழந்தை அங்கு இல்லாதது கண்டு விசாரித்துள்ளார். அவர்கள் குழந்தை தங்கள் அக்கா வீட்டில் இருப்பதாக சொல்லியுள்ளார். ஆனால் அவர்களின் பதிலால் அதிருப்தியடைந்த மங்கை சந்தேகம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அந்த வட்டார மருத்துவரிடம் தகவல் சொல்லியுள்ளார். அவர் நடத்திய விசாரணையில் குழந்தை மூச்சடைத்து இறந்துள்ளதாக சொல்லியுள்ளனர்.

அதன் பின்னர் மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் குழந்தை குருணைப்பால் கொடுத்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் கொலைக்குக் காரணமான குழந்தையின் பாட்டியான பொட்டியம்மாள் மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்த பெண்சிசுக்கொலை மீண்டும் தலைதூக்கிவிடுமோ என்ற அச்சத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments