Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ கைது! – போலீஸார் அதிரடி

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (15:05 IST)
கன்னியாக்குமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாக்குமரி அருகே உள்ள கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சமீபத்தில் காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமியை தேடி வந்தனர்.

சிறுமியை ஒருவழியாக கண்டுபிடித்த போலீஸார் அவரை குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் சிலர் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. இந்நிலையில் தலைமறைவாகியுள்ள நாஞ்சில் முருகேசனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் போலீஸார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக சிறுமியின் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

அடுத்த கட்டுரையில்