Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி!

கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (10:10 IST)
பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வருகின்றன.


 
 
புகழ் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றிருக்கிறார். பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
 
இவருடைய மகனும் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். நேற்று வரை கவிஞர் வைரமுத்து நல்ல உடல் நலத்துடனேயே இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மறைவுக்கு தனக்கே உரித்தான பாணியில் இரங்கல் தெரிவித்தார்.
 
இந்நிலையில் மூச்சு திணறல் காரணமாக கவிஞர் வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments