Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க., அதிமுக இரண்டுமே வேண்டாம் – பாமக எடுத்த புது முடிவு ?

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (11:08 IST)
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி குறித்து அறிவித்துள்ள நிலையில் பாமக தினகரனின் அமமுக வோடு கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

எதிர்ப்புறமான அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது உறுதியாகியுள்ள நிலையில் வேறு எந்தக் கட்சிகளும் ஆர்வம் காட்டாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அந்தக் கூட்டணியில் தேமுதிக வையும் பாமக வையும் இணைக்க பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. கூட்டணி குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பாமகவின் ராமதாஸோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பாமக வின் இளைஞரணி செயலாளரான அன்புமணி ராமதாஸ் திமுகக் கூட்டணிக்கு செல்லவே விருப்பம் காட்டுகிறாராம். விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் பாமக வைக் கூட்டணியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகத் தெரிகிறது.

பாமக தலைவர் ராமதாஸோ அதிமுக கூட்டணிக்குச் செல்லலாம். அங்கு சென்றால் அதிகமான சீட் பெறமுடியும். மேலும் தேர்தல் நிதியும் அதிகமாகப் பெறலாம் என நினைக்கிறாராம். இதனால் கூட்டணி அமைப்பது யாருடன் என்பதில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இப்போது இரண்டுக் கட்சிகளோடும் கூட்டணி அமைக்காமல் டிடிவி தினகரனின் அமமுக வோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணியை உருவக்கலாம் என்ற ஒரு எண்ணமும் பாமக தலைமையின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. அதை உறுதிப்படுத்துவது போல டிடிவி தினகரனும் கூட்டணி தொடர்பாக 5 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அறிவித்துள்ளார்.

பாஜக இருக்கும் கூட்டணியில் நாம் இருந்தால் அது நமக்குக் கண்டிப்பாக பலவீனம்தான், அதனால் திமுக விடம் இருந்து அழைப்பு வந்தால் அங்கு செல்லலாம். இல்லையென்றால் அமமுகவோடுக் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவில் பாமக தலைமை உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒருவேளை அந்தக் கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் மும்முணைப் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments