Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையம் எதிரே பாமக செயலாளர் படுகொலை

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (22:41 IST)
விழுப்புரம் அருகே காவல் நிலையம் எதிதில், பாமக செயலாளர் மர்ம நபர்களால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
 
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்மணி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார்.
 
இஅவர், நேற்று இரவு கண்டமங்கலம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற போது, அப்போது, இவரது அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.
 
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, விழுப்புரம் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த படுகொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப்பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
 
மேலும், அருள்மணி படுகொலையை கண்டித்து, அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். காவல் நிலையம் எதிரே பாமக செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments