பிள்ளை குட்டிகளையும், புருஷனையும் பத்தரமா பாத்துகோங்க... ராமதாஸ் டிவிட்!!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (11:47 IST)
கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான் என பாமக தலைவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமான உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    
 
இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான் என பாமக தலைவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார். அதில் அவட் குறிப்பிட்டுள்ளதாவது... 
 
ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும். 
 
குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது. வெளியில் சென்றால் ‘‘கொரோனா நோயை கொள்முதல் செய்யப் போகிறீர்களா?’’ என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான்! என பதிவிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments