Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாட்டரியை ஒழித்து 18 ஆண்டுகள் ஆகியும் தொடரும் வேதனை!

Webdunia
சனி, 14 மே 2022 (17:16 IST)
லாட்டரியை ஒழித்து 18 ஆண்டுகள் ஆகியும் லாட்டரியால் வேதனை தொடர்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த  இராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்  என்ற செய்தி வேதனையளிக்கிறது. இது குறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்!
 
தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பிறகும் லாட்டரி விற்பனை தொடர்கிறது; ஒருவரே ரூ.62 லட்சத்தை இழந்திருக்கிறார் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கள்ள லாட்டரி விற்பனை எந்த அளவுக்கு புரையோடியிருக்கிறது  என்பதை உணர முடியும்!
 
ஏற்கனவே ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டம் உயிர்களை பலி வாங்கும் நிலையில், கள்ள லாட்டரியும் மனித வேட்டையை தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள். அதனால், தமிழகத்தில் கள்ள லாட்டரியை  அடியோடு ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

இந்தியாவை கண்டித்துவிட்டு ரஷ்யாவுடன் கொல்லைப்புற டீல்! - அமெரிக்க குட்டு அம்பலம்!

இந்திய பெருங்கடலில் இறங்கிய ஸ்டார்ஷிப்! 10வது சோதனையில் வெற்றி!

மதுரை மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: விஜய் மீது வழக்குப்பதிவு..!

இன்று காலையிலேயே 8 மாவட்டங்களில் மழை.. விநாயகர் சதூர்த்தி கொண்டாட திட்டமிடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments