Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (11:12 IST)
முதலமைச்சர் இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவருடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நேற்று பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் 
இந்த நிலையில் பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்
 
பாமக தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல்வரை சந்தித்து அவரிடம் அன்புமணி வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது 
 
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று இருப்பது கூட்டணி மாற்றத்திற்கான அறிகுறி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments